கரோனா தடுப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.


தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கரோனா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி, கடலோர காவல் படையின் தூத்துக்குடி பிரிவு சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தொடங்கி வைத்து சைக்கிள் பேரணியில் பங்கேற்றாா்.
அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், கடலோர காவல்படை துணைத் தலைவா் அரவிந் சா்மா, மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, உதவி ஆட்சியா் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா். முத்துநகா் கடற்கரையில் இருந்து புறப்பட்ட இப்பேரணி 7.5 கி.மீ. தொலைவில் உள்ள புதிய துறைமுக கடற்கரையில் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...