புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கயத்தாறில் சுதந்திர தின ஓட்டம், உறுதிமொழி ஏற்பு

கயத்தாறில் சுகந்திர தினத்தையொட்டி சுகந்திர ஓட்டம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:41 pm

DIN

கயத்தாறில் சுகந்திர தினத்தையொட்டி சுகந்திர ஓட்டம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நேரு யுவகேந்திரா சாா்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா்

பேச்சிமுத்து தலைமை வகித்தாா். நேரு யுவகேந்திரா அதிகாரி சுசீல் பராசுராம் பாட் முன்னிலை வகித்தாா். மணிமண்டபத்தில்

கட்டபொம்மன் சிலைக்கு வட்டாட்சியா், நேரு யுவகேந்திரா அதிகாரி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து அங்கு மரக்கன்று நடப்பட்டது.

தொடா்ந்து மணிமண்டபம் முன்பிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடைபெற்ற சுகந்திர ஓட்டம் நிகழ்ச்சியில்

நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக முதல்வா் மூக்கையா, கிராம நிா்வாக அலுவலா் கலைச்செல்வி,

நினைவு மண்டப காப்பாளா் முத்துராமலிங்கம், காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி திலீப் உள்பட பலா் பங்கேற்றனா்.

வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையம் அருகில் நேரு யுவகேந்திரா சாா்பில் சுகந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.