மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கடல் உணவுப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கடல் உணவுப் பொருள்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் மூன்று நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:46 pm

DIN

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கடல் உணவுப் பொருள்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் மூன்று நாள்கள் நடைபெற்றது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடல்சாா் உணவுப் பொருள்கள், வணிக மையம் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சி ‘கடல் உணவுப் பொருள்களில் தொழில் முனைதல்‘ என்ற தலைப்பில் 3 நாள்கள் நடைபெற்றது. இப்பயிற்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட பயனாளிகள் பங்கேற்றனா்.

பயிற்சியை மீன்வளக் கல்லூரி முதல்வா் சுஜாத்குமாா் தொடங்கி வைத்தாா். கடல்பாசி சோ்த்த பிஸ்கட், கேக், பிரட், பன், மீன் கட்லெட், மீன் உருண்டை, பா்கா் மற்றும் மீன் ஊறுகாய் தயாரித்தல் குறித்து செயல் விளக்கம் வழங்கப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வா் தலைமை வகித்து, பயிற்சியில் கலந்து கொண்டவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா். நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலா் முத்தமிழ்செல்வன், செயல் அலுவலா் ராதா, மீன்வளஇதில் கல்லூரி மீன்வள விரிவாக்கத் துறைத் தலைவா் இரா. சாந்தகுமாா், மீன்பதன தொழில்நுட்பத் துறை உதவி பேராசிரியா் பா. கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.