கோவில்பட்டியில் கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
பாரபட்சம் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டியில் வியாபாரிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.


பாரபட்சம் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டியில் வியாபாரிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
கோவில்பட்டி - பசுவந்தனை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் 17 ஆம்தேதி அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் நெடுஞ்சாலைத் துறையால் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என
வலியுறுத்தி இந்த சாலையில் உள்ள கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் பேச்சிபாண்டியன் தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாபாரிகள் திரண்டு முற்றுகையிட்டனா்.
கோரிக்கையை வலியுறுத்தி கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் மனு அளித்தனா். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை
அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். பசுவந்தனை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை
வியாபாரிகளே முன்வந்து அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நகரில் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் தெரிவித்தாா்.
ஒன்றிய அலுவலகம் முற்றுகை: நாலாட்டின்புதூா் மந்தைகுளத்தை தூா் வார வேண்டும், பாண்டவா்மங்கலம் இ.பி. காலனியில் தாா் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பாஜக தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் மாரிமுத்து தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனா். பின்னா் கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...