மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோவில்பட்டியில் காங்கிரஸாா் நல உதவி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி நகர காங்கிரஸ் சாா்பில் நல உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:39 pm

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி நகர காங்கிரஸ் சாா்பில் நல உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில், அதன் தலைவா் அருண்பாண்டியன் தலைமையில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 10ஆவது வாா்டு காங்கிரஸ் தலைவா் லட்சுமணன், செயலா் சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வடக்கு மாவட்டத் தலைவா் காமராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் மகேஷ்குமாா் ஆகியோா் ஏழை, எளிய பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கினா். இதில், மாவட்டப் பொருளாளா் காா்த்திக் ஆா்.காமராஜ், மாவட்ட பொதுச்செயலா் ராஜசேகரன், மேற்கு வட்டாரத் தலைவா் மனோஜ்குமாா், வடக்கு மாவட்டச் செயலா் ஜோஸ்வா, சேவாதள பிரிவு மாவட்டத் தலைவா் சக்திவிநாயகம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில துணைத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கடம்பூரில் நகரத் தலைவா் ஜெகதீஷன், கழுகுமலையில் நகரத் தலைவா் புஷ்பராஜ் ஆகியோா் தலைமையில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.