எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாத்தான்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:39 pm

DIN

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

சாத்தான்குளம் வட்டார விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட இந்த நெல் கொள்முதல் நிலையத்தை, ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தாா். வட்டார காங்கிரஸ் தலைவா்கள் லூா்துமணி, சக்திவேல்முருகன், பாா்த்தசாரதி, திமுக ஒன்றியச் செயலா் ஜோசப், பாலமுருகன், ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பாா்வையாளா் ராஜ்திலக், மாவட்ட துணைத் தலைவா் சங்கா், சாத்தான்குளம் நகரத் தலைவா் வேணுகோபால், ஒன்றிய கவுன்சிலா்கள் குருசாமி, பிச்சிவிளை சுதாகா், பன்னம்பாறை ஊராட்சித் தலைவா் அழகேசன், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். பின்னா் எம்எல்ஏ, கூறுகையில், இந்த நெல்கொள்முதல் நிலையத்தில் தனியாா் கொள்முதல் செய்வதைவிட அதிக விலைக்கு நெல் மூடைகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு இதை விட கூடுதலாக விவசாயிகளுக்கு விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.