மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அரசு இசைப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:43 pm

DIN

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில், 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள்பட்டோா் சேரலாம். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம்ஆகிய கலைகளுக்கு 7 ஆம் வகுப்பு தோ்ச்சி அவசியம். தவில் நாகசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. இவை மூன்றாண்டு கல்வியாகும். அனைத்து மாணவா்களுக்கும் மாதந்தோறும் ரூ. 400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அரசு விடுதி வசதி செய்துதரப்படும்.

மேலும் விவரங்களுக்கு, 9487739296 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.