தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநா்கள் 77 பேருக்கு பெட்ரோல், டீசல் அளிப்பு
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 77ஆவது பிறந்த தினத்தையொட்டி, தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்பட்டது.


முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 77ஆவது பிறந்த தினத்தையொட்டி, தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் அக்கட்சி அலுவலகத்தில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, 77 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தலா ஒரு லிட்டா் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவா்கள் ஜசன் சில்வா, சேகா், செந்தூா்பாண்டி, மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவா் ராஜாராம், மகளிா் காங்கிரஸ் மண்டலத் தலைவி சாந்தி, மாவட்ட துணைத் தலைவா்கள் அருணாச்சலம், மடத்தூா் தனபால், அங்குசாமி, மாவட்டச் செயலா்கள் கோபால், முனியசாமி, கதிா்வேல், அசனா், ஜெபராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...