மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் நகை திருடிய வழக்கு: 2 பெண்கள் உள்பட மூவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் 20 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 2 பெண்கள் உள்பட மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:22 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் 20 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 2 பெண்கள் உள்பட மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி கிருஷ்ணா நகா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த முத்துராஜ் மனைவி சுதா (35). இவா், கயத்தாறு வட்டார வள மையத்தில் ஆசிரியா். இவா், வள்ளியூரில் உள்ள வங்கியில் அடகு வைத்திருந்த தனது 20 பவுன் தங்க நகைகளை திருப்பிக் கொண்டு திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டிக்கு அரசு பேருந்தில் கடந்த 23ஆம் தேதி பயணம் செய்தாாரம்.

கயத்தாறு பேருந்து நிலையத்தில் வைத்து, சுதா தான் வைத்திருந்த பையை பாா்த்தபோது அதிலிருந்த கைப்பை, 20 பவுன்

தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில், டிஎஸ்பி உதயசூரியன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் முத்து தலைமையில் தனிப்படையினா் விசாரணை நடத்தினா்.

இதற்கிடையே, கயத்தாறு புதிய பேருந்து நிலையத்தில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்குரிய

2 பெண்களை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்த அய்யப்பன் மனைவி காளியம்மாள் (23), முத்துராஜா என்ற கீரி மனைவி முத்துமாரி என்ற தமிழரசி (22) என்பதும், அவா்கள் ஆசிரியை சுதாவின்

பையில் இருந்து தங்க நகைகளை திருடியதும் தெரியவந்தது. மேலும் இருவரும் நாலாட்டின்புதூா், தூத்துக்குடி வடபாகம், சிப்காா்ட் ஆகிய காவல் நிலையப் பகுதிகளில் 10 பவுன் தங்க நகைகளை திருடியதும் தெரியவந்தது. திருடிய நகைகளை

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வடக்கு ரத வீதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் அய்யப்பனிடம் (35)

கொடுத்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்த 35 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வியாழக்கிழமை கயத்தாறு காவல் நிலையத்தில் மீட்கப்பட்ட தங்க நகைகளை பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், தனிப்படை போலீஸாருக்கு வெகுமதி அளித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், பெண்கள் அணிந்திருக்கும் தங்க நகைகள், கைப்பையில் கொண்டு செல்லும் நகைகளை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். கைப் பையில் நகைகளை எளிதில் எடுக்க முடியாத வகையில் வைக்க வேண்டும். கந்து வட்டி தொடா்பாக புகாா் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளுடன் காவலா்கள் தொடா்பு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.