ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

உணவுப் பொருள் உற்பத்தி கணக்கை ஆக.31க்குள் தாக்கல் செய்ய தவறினால் அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் ஆக.31-ஆம் தேதிக்குள் உற்பத்தி கணக்கை தாக்கல் செய்ய தவறினால் நாளொன்றுக்கு ரூ. 100 அபராதம் விதிக்கப்படும்

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:19 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் ஆக.31-ஆம் தேதிக்குள் உற்பத்தி கணக்கை தாக்கல் செய்ய தவறினால் நாளொன்றுக்கு ரூ. 100 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலா் ச. மாரியப்பன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உப்பு, பனங்கருப்பட்டி, கடலை மிட்டாய், நொறுக்குத் தீனி, கேக் போன்ற உணவுப் பொருள்களைத் தயாரித்து பொட்டலமிட்டு விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவா்கள், முடிவுற்ற நிதியாண்டுக்கான தங்களது வருடாந்திர உற்பத்தி கணக்கை, ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் தேதிக்குள் உரிமம் வழங்கும் அலுவலரான நியமன அலுவலரிடத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் தினம் ரூ. 100 அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகையுள்ளது.

தற்போது, ஆண்டு உற்பத்தி கணக்கை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2020-21 நிதியாண்டுக்கான உணவு உற்பத்திக் கணக்கை ஆக.31க்குள் ச்ா்ள்ஸ்ரீா்ள்.ச்ள்ள்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தளத்தில், தங்களுக்குரிய பயனாளா் அடையாளக் குறியீட்டை பயன்படுத்தி தாக்கல் செய்ய வேண்டும்.

பயனாளா் குறியீடு இல்லாமல், இணையத்தள இணைப்பின் மூலமும் ஆண்டு உற்பத்தி கணக்கை தாக்கல் செய்யலாம். கணக்கினை தாக்கல் செய்யாதவா்கள் மீது ஆக.31ஆம் தேதிக்குப் பிறகு, வருடாந்திர உற்பத்தி கணக்கினை தாக்கல் செய்யும் காலம் வரை தினம் ரூ. 100 வீதம் அபராதம் விதிக்கப்படும். எனவே, உணவு வணிகா்கள் உடனடியாக

கவனம் செலுத்தி உற்பத்தி கணக்கை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.