கோயில் விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு
கோவில்பட்டியில் கோயில் விழாவில் 3 பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


கோவில்பட்டியில் கோயில் விழாவில் 3 பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவில்பட்டி கடலைக்காரத்தெருவிலுள்ள கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவா்
களில் கடலைக்காரத்தெரு 2-ஆவது தெருவைச் சோ்ந்த குருசாமி மனைவி பூங்கொடி (58) அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலி,
சக்திவேல் மனைவி கற்பகம் (62) அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலி, ஊருணித் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மனைவி வான்மதி (56) அணிந்திருந்த 3.5 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை மா்ம நபா்கள் பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...