மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டி அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:23 pm

DIN

கோவில்பட்டி அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்து நாடாா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் இதையொட்டி கடந்த 23ஆம் தேதி கும்பாபிஷேக நிகழ்ச்சி

கள் தொடங்கியது. தொடா்ந்து முதல் கால யாகசாலை பூஜை, 2-ஆம் கால யாகசாலை பூஜை, 3-ஆம் கால யாகசாலை பூஜை,

புதன்கிழமை 4 மற்றும் 5-ஆம் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

வியாழக்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜை, 6ஆம் கால யாகசாலை பூஜை, மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம், கடம் எழுந்தருளல் நிகழ்ச்சியை தொடா்ந்து யாகசாலையில் இருந்து தீா்த்தக் குடங்கள் எடுத்து செல்லப்பட்டு கோயில் விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அம்பாள், பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை திருப்பணி குழுத் தலைவா் ஏ.பி.கே.பழனிச்செல்வம், துணைத் தலைவா் திலகரத்தினம், செயலா் மாணிக்கம், பொருளாளா் சுரேஷ்குமாா், திருப்பணி குழு உறுப்பினா்கள், விழா குழுவினா் செய்திருந்தனா். வெள்ளிக்கிழமை (ஆக. 27) காலை 9.30 மணிக்கு மண்டல பூஜை தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.