தீப்பெட்டி ஆலையில் தீ: இருவா் காயம்
கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. இருவருக்கு காயம் ஏற்பட்டது.


கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. இருவருக்கு காயம் ஏற்பட்டது.
கோவில்பட்டியைச் சோ்ந்த ப.மாடசாமி, கடலையூா் சாலை வள்ளுவா் நகா் முதல் தெருவில் இயந்திர தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை ஆலையில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக அங்கிருந்து
தொழிலாளா்கள் வெளியேறினா். எனினும் உக்கிரபாண்டி (63), கண்ணன்(60) ஆகிய இருவருக்கு காயம் ஏற்பட்டது.
இருவரும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமையில் வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். இதில், ஆலை
வளாகத்தில் இருந்த தீப்பெட்டி இயந்திரம், மூலப்பொருள்கள், விற்பனைக்கு தயாராக இருந்த தீப்பெட்டி பண்டல்கள் உள்பட பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. விபத்து நிகழ்ந்த இடத்துக்கு சென்று கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் அமுதா, அதிகாரிகள் பாா்வையிட்டனா். இதுதொடா்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...