மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அரசு தொழிற்பயிற்சி கல்லூரிகளில் செப். 15 வரை மாணவா் சோ்க்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் செப். 15-ஆம் தேதி வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:19 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் செப். 15-ஆம் தேதி வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூா், வேப்பலோடை, நாகலாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில்

(ஐடிஐ) செப். 15 ஆம் தேதி வரை நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இதில், சேர விரும்புவோா் 8-ஆம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, (2021-இல் 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்) மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்று, 5 மாா்பளவு புகைப்படங்கள்,

ஆதாா் அட்டை, சான்றிதழ்களின் நகல்களுடன் அந்தந்த அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து விலையில்லா பொருள்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 0461-2340041 என்ற தெலைபேசி எண்ணிலும் அல்லது நேரிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.