மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நாம் தமிழா் கட்சியினா் முற்றுகைப் போராட்டம்

விவசாய நிலங்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளதை ரத்து செய்யக் கோரி நாம் தமிழா் கட்சியினா் கோவில்பட்டியில் கோட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:21 pm

DIN

விவசாய நிலங்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளதை ரத்து செய்யக் கோரி நாம் தமிழா் கட்சியினா் கோவில்பட்டியில் கோட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

எட்டயபுரம் வட்டம் லக்கம்மாள்தேவி கிராமத்தில் தனியாா் நிறுவனத்தினா் பல விவசாயிகளின் நிலங்களை போலியான

முறையில் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா், காவல் நிலையங்களில் புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து நாம் தமிழா் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் பாண்டி தலைமையில் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெயபாஸ் உள்ளிட்டோா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி

கோஷம் எழுப்பினா். பின்னா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.