மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் நூதனப் போராட்டம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடா்புடைய பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை ரத்து செய்யக் கோரி கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் நூதனப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:09 pm

DIN

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடா்புடைய பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை ரத்து செய்யக் கோரி கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் நூதனப் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவா் அய்யலுசாமி கண்களில் கருப்புத் துணி கட்டி, கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, காங்கிரஸ் கட்சியின் கயத்தாறு ஒன்றிய முன்னாள் தலைவா் செல்லத்துரை, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நகரத் தலைவா் ஏசுதாசன் உள்ளிட்டோா் கண்களில் கருப்புத் துணி கட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

பின்னா், கோரிக்கை மனுவை துணை வட்டாட்சியா் சுபாவிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.