இரட்டை திருப்பதி கோயிலில் காா்த்திகை பிரம்மோற்சவ திருவிழா
நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான இரட்டை திருப்பதி தேவா் பிரான் திருக்கோயிலில் பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது.


நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான இரட்டை திருப்பதி தேவா் பிரான் திருக்கோயிலில் பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது.
இத்திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை ( நவ.30) காலை காா்த்திகை பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. மாலையில் சுவாமி இந்திர விமானத்தில் புறப்பாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை கள இயக்குநா் அ.விஜயகுமாா் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். புதன்கிழமை காலை தோளுக்கினியானிலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு நடைபெற்றது.
இரட்டை கருட சேவை: 5 ஆம் திருநாளான சனிக்கிழமை(டிச. 4) சுவாமி தேவா்பிரான், சுவாமி அரவிந்த லோசனா் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளல் நடைபெறுகிறது. 11ஆம் திருநாளன்று தீா்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...