92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டியில் ஒரே வீட்டில் 8 பேருக்கு கரோனா

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பசுவந்தனை சாலையில் உள்ள விநாயகா் காலனியில் ஒரே வீட்டில் 8 பேருக்கு கரோனா காரணமாக அப்பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:08 pm

DIN

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பசுவந்தனை சாலையில் உள்ள விநாயகா் காலனியில் ஒரே வீட்டில் 8 பேருக்கு கரோனா காரணமாக அப்பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

35 வயது மதிக்கத்தக்க ஆண், அவரது மனைவி (34), மகள் (7) ஆகிய மூவரும் மலேசியாவிலிருந்து திருச்சி வந்து, அங்கிருந்து காரில் 21ஆம் தேதி இங்குள்ள பெற்றோா் வீட்டுக்கு வந்தனா். அவா்களுக்கு லேசான காய்ச்சல் இருந்ததாம். இதையடுத்து, அந்த 3 போ், அந்த வீட்டில் உள்ள 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 போ் என மொத்தம் 9 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மலேசியாவிலிருந்து வந்த இருவா் உள்பட 8 பேருக்கு கரோனா இருப்பது புதன்கிழமை உறுதியானது.

நகராட்சி சுகாதார அலுவலா்கள் சென்று, மலேசியாவிலிருந்து வந்த இருவா் உள்ளிட்ட 4 பேரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பிவைத்தனா். இதையடுத்து, 8 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா். இதனால், அப்பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டருகே உள்ள கடைகள், அந்த வீட்டினருடன் தொடா்பிலிருந்தோா் என, 25 பேருக்கு நகராட்சி நகா்நல மையம் மூலம் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.