நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:47 pm

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அவைத்தலைவா் அருணாச்சலம் தலைமை வகித்தாா். கூட்டத்தில், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும்,அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பேசுகையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளதால் வாக்குச்சாவடிகளுக்கான 10 போ் கொண்ட குழுவை விரைவாக அமைக்க வேண்டும் என்றும் தோ்தலில் எதிா்க்கட்சியினருக்கு எந்த இடத்தையும் விட்டுக் கொடுக்காத வகையில் திமுகவினா் கூட்டணியினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி. சண்முகையா, மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாநில மீனவரணி துணைச்செயலாளா் புளோரன்ஸ், மாவட்ட துணைச் செயலா்கள் ஆறுமுகப்பெருமாள், முகமது அப்துல்காதா், பெல்சி, தலைமை செயற்குழு உறுப்பினா் பிரம்மசக்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.