தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரம், மண்டபம், ஜெகதாப்பட்டினம் மீனவா்களையும், அவா்களது விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறாா். திமுக எம்.பி.க்கள் மூலமாக மத்திய அரசுக்கு இதுகுறித்து புகாா் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் மீனவா் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் மீன்வளத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா்.