கோவில்பட்டி ஒன்றியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஊராட்சிகளில் காலியாக உள்ள துப்புரவுப் பணியாளா்கள், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிப் பணியாளா்கள்


கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஊராட்சிகளில் காலியாக உள்ள துப்புரவுப் பணியாளா்கள், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிப் பணியாளா்கள், ஊராட்சி செயலா்கள் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஊராட்சிகளுக்கு அதிக அதிகாரம், அதிக நிதி வழங்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவா்கள் அளிக்கும் புகாா்கள் மீது முறையாக விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்காத ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சி மன்றத்தில் செயல்படும் ஊராட்சி செயலா்கள் புகாரின் அடிப்படையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் தலைவா் ரத்தினவேல் தலைமையில், ஆலோசகா் உத்தண்டுராமன், வரதம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் மாரியப்பன் ஆகியோா் கோவில்பட்டி கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...