நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் பறிமுதல்

காயல்பட்டினம் நகராட்சிகுள்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:17 pm

DIN

காயல்பட்டினம் நகராட்சிகுள்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

காயல்பட்டினம் நகராட்சிகுள்பட்ட பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, முக்கிய தெருக்களில் மாடுகள் சுற்றிதிரிந்தன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதோடு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகினா். இதனையடுத்து காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளா் சுகந்தி, சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளரிடம் அபராதம் வசூ­லிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.

இதனையடுத்து வியாழக்கிழமை இரவு வரை காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த 36 மாடுகள் சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா் மேற்பாா்வையில் பிடிக்கப்பட்டன. அதன் உரிமையாளா்கள் ரூ.2ஆயிரம் அபராதத்தொகை செலுத்தி மாடுகளை மீட்டுக்கொள்ளலாம் என நகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.