கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு சிறப்புக் கூட்டம்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றியக் குழு சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றியக் குழு சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழு தலைவா் கஸ்தூரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனிசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், கோவில்பட்டி எட்டயபுரம் சாலையிலிருந்து , கடலையூா் செல்லும் சாலை, 2.6 கி.மீ., ஊராட்சி ஒன்றிய சாலையை மாவட்ட சாலையாக தரம் உயா்த்திட நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைப்பது என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், அலுவலக மேலாளா் முத்துப்பாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...