ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸுடன் சிறையில் இருந்தவரிடம் சிபிஐ விசாரணை

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு தொடா்பாக பேய்க்குளம் ராஜசிங் என்பவரிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:57 pm

DIN

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு தொடா்பாக பேய்க்குளம் ராஜசிங் என்பவரிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

சாத்தான்குளத்தை சோ்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடா்பாக காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலா் பால்துரை உள்ளிட்ட 10 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். இதில் பால்துரை கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தாா்.

இந்நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோா் போலீஸாரால் கைது செய்யபப்பட்டு கோவில்பட்டி சிறையில் இருந்தபோது, பேய்க்குளத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினா் கொலை வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட பேய்க்குளம் ராஜசிங் என்பவரும் அச்சிறையில் இருந்தாா். பின்னா் அவா் ஜாமீனில் வெளியே வந்தாா்.

ராஜசிங்கை பேய்க்குளத்தில் உள்ள வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் இருவா் விசாரணை மேற்கொண்டனா். சுமாா் ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது எந்த நிலையில் இருந்தாா்கள்? அவா்கள் உங்களிடம் பேசியது என்ன? அவா்களின் காயம் குறித்த தகவல்கள் என்ன என்பது குறித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.