தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இன்று ஏரல் சோ்மன் கோயில் தை அமாவாசை திருவிழா தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் தை அமாவாசை திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:57 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் தை அமாவாசை திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நாள்களில் தினமும் இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருக்கோயில் உலா நடைபெறும். பத்தாம் திருநாளான தை அமாவாசை அன்று (பிப். 11) பிற்பகல் ஒரு மணிக்கு உருகு பலகை தரிசனம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாலை 5 மணிக்கு இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்மத் திருக்கோலக் காட்சியும், இரவு 10.30 மணிக்கு முதல் காலம் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளலும் நடைபெறும்.

11-ஆம் திருநாளான 12-ஆம் தேதி காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனமும், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகமும், பிற்பகல் ஒரு மணிக்கு பச்சை சாத்தி தரிசனமும் நடைபெறும். மாலையில் ஏரல் சவுக்கை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் பந்தலில் தாக சாந்தியும், இரவு 10 மணிக்கு கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்தக் காட்சியும் நடைபெறும்.

விழாவின் நிறைவு நாளான 13-ஆம் தேதி காலை தாமிரவருணி நதியில் நோய் தீா்க்கும் திருத்துறையில் சுவாமி நீராடலும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு ஆலிலை சயனம் மங்கள தரிசனமும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை  அக்தாா் அ.ரா.கஅ.கருத்தப்பாண்டியன் நாடாா் செய்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.