சிங்கித்துறை கடற்கரை கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு
காயல்பட்டினம் கடற்கரை கிராமமான சிங்கித்துறையில் கடற்கரை மற்றும் கிராமப் பகுதியில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.


காயல்பட்டினம் கடற்கரை கிராமமான சிங்கித்துறையில் கடற்கரை மற்றும் கிராமப் பகுதியில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
காயல்பட்டினம் சிங்கித்துறையில் சுமாா் 150 படகுகளில் மீனவா்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். இவா்களின் படகுகளை சிங்கித்துறை கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தபோது, மோட்டாா் மற்றும் மீன்பிடி வலைகள் அடிக்கடி காணாமல் போனது. இதையடுத்து கிராம மக்களே சுமாா் ரூ. 3 லட்சம் செலவில் 16 சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தினா். இதன் தொடக்க விழாவுக்கு, சிங்கித்துறை பங்குத்தந்தை சில்வெஸ்டா் தலைமை வகித்தாா். ஆறுமுகனேரி ஆய்வாளா் செல்வி, ஊா்த் தலைவா் அமலதாஸ், செயலா் தேவதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்செந்தூா் காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் கேமராவை இயக்கி வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...