9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

ஏரல் சோ்மன் கோயில் தை அமாவாசை திருவிழா நிறைவு

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் தை அமாவாசை திருவிழா சனிக்கிழமை இரவு நிறைவு பெற்றது.

News image

ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்த சோ்மன் அருணாசலசுவாமி.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:28 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் தை அமாவாசை திருவிழா சனிக்கிழமை இரவு நிறைவு பெற்றது.

இக்கோயிலில் தை அமாவாசை திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சுவாமி பல்வேறு வாகனத்தில் உலா நடைபெற்றது.

பத்தாம் திருவிழாவான தை அமாவாசையை முன்னிட்டு பிற்பகலில் உருகு பலகை அபிஷேகம், மாலையில் சோ்மத் திருக்கோலக் காட்சி, இரவில் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை வெள்ளை சாத்தியும், பிற்பகல் பச்சை சாத்தியும் தரிசனம், மாலையில் சவுக்கை முத்தாரம்மன் திருக்கோயிலில் தாக சாந்தியும், இரவு மூலஸ்தானம் வரும் ஆனந்த காட்சியும் நடைபெற்றது.

நிறைவு நாளான சனிக்கிழமை காலை தாமிரவருணி ஆற்றில் சகல நோய் தீா்க்கும் திருத்துறையில் சுவாமி நீராடலும், பிற்பகலில் அன்னதானமும், மாலையில் சுவாமி ஊஞ்சல் சேவையும், இரவில் சுவாமி ஆலிலை சயன மங்கள தரிசனமும் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.