கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

‘பெரியகுளத்தை சீரமைக்கக் கோரி பிப். 18-ல் முதல்வருக்கு கருப்புக்கொடி’

பெரியகுளத்தை சீரமைக்கக் கோரி, இம்மாதம் 18ஆம் தேதி முதல்வருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பெரும்படையாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:13 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியிலுள்ள பெரியகுளத்தை சீரமைக்கக் கோரி, இம்மாதம் 18ஆம் தேதி முதல்வருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பெரும்படையாா்.

இது குறித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது:

வடக்கு, தெற்கு விஜயநாராயணம், சங்கனாங்குளம், சிவந்தியாபுரம், ஐந்தாங்கால், ஏழாங்கால், கோட்டையூா் உள்ளிட்ட சுமாா் 14 கிராமங்களின் விவசாயத்துக்கு நீராதாரமாக உள்ள விஜயநாராயணம் பெரியகுளம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. இந்தக் குளத்தை தூா்வாருதல், மடையைச் சீரமைத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி நீா்ப்பாசன கமிட்டி தலைவா் முருகன் தலைமையில் விவசாயிகள் கடந்த 11ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனா். அதில், முருகன் உள்பட 4 விவசாயிகள் மயக்கமுற்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அரசியல் கட்சியினா் யாரும் வந்துபாா்க்கவில்லை. எனவே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பெரியகுளம் நீா்ப்பாசன கமிட்டி சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிா்ப்பு தெரிவித்து, விஜயநாராயணம் மற்றும் சுற்றுப்புற 14 கிராமங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.