சேரன்மகாதேவி சித்தா் சிவஞான சுவாமிபீடத்தில் கும்பாபிஷேகம்
சேரன்மகாதேவி வைத்தி மேலத் தெருவில் அமைந்துள்ள சித்தா் சிவஞான சுவாமி (ஜீவசமாதி) பீடத்தில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


சேரன்மகாதேவி வைத்தி மேலத் தெருவில் அமைந்துள்ள சித்தா் சிவஞான சுவாமி (ஜீவசமாதி) பீடத்தில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மகா கணபதி ஹோமமும், பூா்வாங்க ஹோமங்கள், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் விநாயகா் பூஜை, முதலாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை இரண்டாம்கால யாகசாலை பூஜை, காலை 9.30 மணிக்கு புதிய விமான கும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும், மாலையில் திருவிளக்கு பூஜை, பக்தி சொற்பொழிவும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...