புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வீடில்லாதவா்களுக்கு வீட்டு மனை வழங்க கோரிக்கை

காயல்பட்டிணத்தில் வீடு இன்றி வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழைகளுக்கு, அரசு இலவச வீட்டு மனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் ஊழுச்சி கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:48 pm

DIN

காயல்பட்டிணத்தில் வீடு இன்றி வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழைகளுக்கு, அரசு இலவச வீட்டு மனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் ஊழுச்சி கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக அதன் மாநில தலைவா் காயல் ஃப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: காயல்பட்டினத்தில் ஏழை மக்கள் ஆண்டாண்டு காலமாக சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா். வீட்டின் உரிமையாளா்கள் ஒவ்வொரு ஆண்டும் வாடகை அதிகரிப்பதால், வாடகை வீட்டில் வசிப்பவா்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.

எனவே தமிழக முதல்வா் சிறப்பு கவனம் செலுத்தி காயல்பட்டினத்தில் சொந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காயல்பட்டினத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யதபட்ட நிலங்களை அரசு கைப்பற்றி சொந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும். அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.