திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா கொடிப்பட்டம் வீதி உலா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை தொடங்கும் மாசித் திருவிழா கொடியேற்றத்திற்காக, செவ்வாய்கிழமை மாலையில் கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை தொடங்கும் மாசித் திருவிழா கொடியேற்றத்திற்காக, செவ்வாய்கிழமை மாலையில் கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது.
14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12-ம் திருவிழா மண்டகப் படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 1-ம் படி செப்பு படி ஸ்தலத்தார் பொ.முத்துசாமி அய்யர் யானை மீது வைத்து கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தது.
நிகழ்ச்சியில் திருக்கோயில் செயல் அலுவலர் பா.விஷ்ணுசந்திரன், கண்காணிப்பாளர்கள் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து, திருக்கோயில் பணியாளர்கள், தக்கார் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...