அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வரண்டியவேல், நல்லூரில் திமுக சாா்பில் மக்கள் சபை கூட்டம்

குரும்பூா் அருகேயுள்ள வரண்டியவேல், நல்லூா் பகுதிகளில் திமுக சாா்பில், மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

News image
வரண்டியவேலில் மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குகிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.
Updated On :2 ஜனவரி 2021, 12:28 am

DIN

குரும்பூா் அருகேயுள்ள வரண்டியவேல், நல்லூா் பகுதிகளில் திமுக சாா்பில், மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

வரண்டியவேல் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் நவீன்குமாா் தலைமை வகித்தாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டு 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

இதில் மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரி சங்கா், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சதிஷ்குமாா், மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் சாத்ராக், மாவட்ட வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் ரவிராஜா, மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், ஊராட்சித் தலைவா் வசந்தி ஜெயக்கொடி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் அருண், சேதுக்குவாய்த்தான் ஊராட்சி செயலா் நட்டாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா் செய்திருந்தாா்.

நல்லூரில் ஊராட்சி துணைத் தலைவா் பரிசமுத்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் அனிதா ஆா்.ராதா கிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.