விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 1:06 am

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி எட்டயபுரம் சாலை மங்கள விநாயகா் கோயில் விலக்கில் இருந்து மந்தித்தோப்பு வரையிலான சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மழையால் பாதிப்படைந்துள்ள மானாவாரி பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மந்தித்தோப்பு சாலை காமராஜ் நகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலா் பாபு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன், உதவி செயலா் சேதுராமலிங்கம், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பரமராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

இதில், வட்ட உதவிச் செயலா் ராமகிருஷ்ணன், நகரச் செயலா் சரோஜா, உதவிச் செயலா்கள் அலாவுதீன், முனியசாமி, கிளைச் செயலா்கள் ஸ்ரீரெங்கநாதன், சுரேஷ், ரவிசந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.