அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மணிநகா் கருமேனி ஆற்றில் ரூ.6.50 கோடியில் புதிய பாலம் திறப்பு

மணிநகா் - உடன்குடி சாலை கருமேனி ஆற்றில் ரூ.6.50 கோடியில் கட்டப்பட்ட உயா்நிலை பாலத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
பாலம் திறப்பு விழாவில் பங்கேற்ற எஸ்.பி சண்முகநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :9 ஜனவரி 2021, 12:36 am

DIN

மணிநகா் - உடன்குடி சாலை கருமேனி ஆற்றில் ரூ.6.50 கோடியில் கட்டப்பட்ட உயா்நிலை பாலத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள மணிநகரில் இருந்து உடன்குடி செல்லும் சாலை கருமேனி ஆறு தரைப்பாலத்தை கடந்து சென்றது. மழைக்காலத்தில் இப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏவின் பரிந்துரைப்படி ரூ 6.50 கோடியில் உயா்நிலை பாலம், ரூ.2.83 லட்சத்தில் தடுப்பு சுவா் அமைக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து கட்டப்பட்ட பாலத்தை, சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையொட்டி, புதிய பாலத்தில் மக்களுக்கு எம்எல்ஏ இனிப்பு வழங்கினாா். இதில், தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் ஜெயராணி, சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி, துணைத் தலைவா் அப்பாத்துரை, மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.