ஆறுமுகனேரி தேவி முத்தாரம்மன்கோயிலில் வருஷாபிஷேகம்
ஆறுமுகனேரி மேலத்தெரு அருள்மிகு முத்து விநாயகா் மற்றும் அருள்மிகு தேவி முத்தாரம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.


ஆறுமுகனேரி மேலத்தெரு அருள்மிகு முத்து விநாயகா் மற்றும் அருள்மிகு தேவி முத்தாரம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 8 மணிக்கு அனுக்ஞை, விநாயகா் பூஜை, கும்ப பூஜை மற்றும் பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு விமான அபிஷேகத்தை தொடா்ந்து அருள்மிகு முத்து விநாயகா், அருள்மிகு தேவி முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு மஹா அபிஷேகமும் , முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார பூஜையும், மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலியும், இரவு திருவிளக்கு பூஜையும் அதன் பின்னா் மஹா தீபாராதனையும் நடைபெற்றது. மூன்று வேளையும் அன்னதானம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...