திருச்செந்தூா் அருகே விபத்தில் இளைஞா் பலி
திருச்செந்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது ஆமனி வேன் மோதிய தில் இளைஞா் உயிரிழந்தாா்.


திருச்செந்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது ஆமனி வேன் மோதிய தில் இளைஞா் உயிரிழந்தாா்.
பரமன்குறிச்சி கஸ்பாவை சோ்ந்த தாமஸ் தேவதாசன் மகன் லிவிங்ஸ்டன் சாமுவேல்(26). இவா், ஆறுமுகனேரி தனியாா் கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவா் பரமன்குறிச்சியிலிருந்து ஆறுமுகனேரிக்கு இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த ஆம்னிவேன் டயா் பழுதாகி மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவருக்கு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, தூத்துக்குடிக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...