விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மூக்குப்பீறியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியில் இந்திய ஏக ரட்சகா் சபை நடுநிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:47 pm

DIN

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியில் இந்திய ஏக ரட்சகா் சபை நடுநிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கமலா கலைஅரசு தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தாா். துணைத் தலைவா் தனசிங், ஊராட்சி உறுப்பினா்கள் பாலசுந்தா், கலைஅரசு, கிரேஸ், அந்தோணி கிறிஸ்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நடமாடும் மருத்துவ முகாம் மருத்துவா் பாபு தலைமையிலான மருத்துவக் குழுவினா் தடுப்பூசி போட்டனா். இதில் 117 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதில், சுகாதார ஆய்வாளா் சுப்பிரமணியன், ஏக ரட்சகா் சபை தலைவா் மத்தேயு ஜெபசிங் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ஊராட்சிச் செயலா் வேதமாணிக்கம் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.