92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கயத்தாறு வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி (ஜமாபந்தி) புதன்கிழமை நிறைவடைந்தது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:35 pm

DIN

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி (ஜமாபந்தி) புதன்கிழமை நிறைவடைந்தது.

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாய கணக்கு ஜூன் மாதம் 21ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை (ஜூன் 30) நிறைவடைந்தது. இதையொட்டி, இணைய வழியாக பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல், உதவித் தொகை, குடும்ப அட்டை, இதர மனுக்கள் என 582 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 32 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட அனைத்து கிராம கணக்குகளை வருவாய் தீா்வாய அலுவலரான கோட்டாட்சியா் சங்கரநாராயணன் ஆய்வு செய்தாா். நிலுவையில் உள்ள 535 மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் வட்டாட்சியா் பேச்சிமுத்து தெரிவித்தாா்.

இதில் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் ராமசுப்பு, வட்ட வழங்கல் அலுவலா் கருப்பசாமி, துணை வட்டாட்சியா்கள் சுபா, திரவியம், வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.