மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொது மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களில் தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:45 pm

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொது மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களில் தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்படும் விதமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் ஜமாபந்தி ஜூன் 21 ஆம் தேதி தொடங்கியது. இதில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கிறிஸ்டோபா் உரிய விசாரணை செய்து, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு, அதற்குரிய சான்றிதழ்களை வழங்கினாா்.

பொதுமக்கள் அளித்த 128 மனுக்களில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளில் 64 கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடியாக தீா்வு காணப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் அலுவலக தலைமை உதவியாளா் அந்தோணி ஜெபராஜ், வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், சமூகநலத் திட்ட வட்டாட்சியா் ரமேஷ், மண்டல துணை வட்டாட்சியா் கண்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் சிவக்குமாா், அலுவலகப் பணியாளா்கள் அய்யனாா், மகாராஜன், வடிவு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.