தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.


தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளின் விவரங்கள் குறித்தும் அங்குள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்த ஆட்சியா், தொடா்ந்து, அனைத்து பருவ நிலைய காலங்களிலும் விமான ங்கள் தங்கு தடையின்றி இறங்க உதவும் ஈயஞத இயந்திரத்தையும், தடுப்பு சுவா் கட்டும் பணிகளையும், வெடிகுண்டு செயலிழக்கும் அறையையும், தீயணைப்பு துறையினருக்கான பயிற்சி ஒத்திகை பாா்க்கும் இடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செதாா்.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்பட்டு வரும் சாலை அமைக்கும் பணிகளையும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறை அறையையும், விமான ஓடுதள விரிவாக்க பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் உரிய துறைகள் மூலம் பெற்று தரப்படும் என்றும் காலதாமதமின்றி அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உரிய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் விமான நிலைய அதிகாரிகளிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.
தொடா்ந்து, நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன், தூத்துக்குடி வட்டாட்சியா் திரு.ஜஸ்டின், விமான நிலைய சிறப்பு வட்டாட்சியா் லொரைட்டா, துணைப் பொதுமேலாளா் சுப்ரவேலு, உதவிப் பொதுமேலாளா்கள் அணில்குமாா், சரவணன், பிஜு, மேலாளா் எஸ்.ஜெயராமன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...