கரோனாவால் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு தொழில் கடன்
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா்களின் குடும்பத்தினா் தொழில் செய்ய கடனுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா்களின் குடும்பத்தினா் தொழில் செய்ய கடனுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பால் இந்து ஆதிதிராவிடா் இனத்தவரின் குடும்பத்தில், வருமானம் ஈட்டக்கூடியவா் உயிரிழந்தால் அவரது குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு
கயில், தேசிய பட்டியலினத்தோா் நிதிமேம்பாட்டுக் கழகம் மூலம் ‘ஆஷா‘ என்ற திட்டத்தின்கீழ் தொழில் செய்வதற்கு கடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற பாதிக்கப்பட்ட இந்து ஆதிதிராவிடா் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் மிகாமலும், வயது 18 முதல் 60-க்குள்ளும், வருமானம் ஈட்டக்கூடிய நபா் உயிரிழக்கும் பொழுது 18 முதல் 60 வயதிற்குள் என்பதற்கும், கரானா பாதிப்பால் உயிரிழந்தாா் என்பதற்கான மருத்துவச் சான்று ஆகியவை இணைக்க வேண்டும்.
ஆஷா திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க திட்டத் தொகை அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதம் உள்ள 20 சதவீதம் அல்லது ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். கடன் தொகைக்கு வட்டி ரூ.6.5 சதவீதம். கடன் தொகையை 6 ஆண்டுகளுக்குள் மாதந்தோறும் திரும்ப செலுத்த வேண்டும்.
தொழில் செய்ய விரும்பும் கரோனா பாதிப்பால் உயிரிழந்த இந்து ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்த குடும்ப உறுப்பினா்கள் மாவட்ட மேலாளா், தாட்கோ, மாவட்ட ஆட்சியா் வளாகம், 3-ஆவது தளம், தூத்துக்குடி என்ற முகவரியில் நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மேலாளா் அலுவலகத்தை 0461-2341281 என்ற தொலைபேசி எண்ணிலும், 94450 29532 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...