92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நேஷனல் கல்லூரி மாணவா்கள் தன்னாா்வலா் விருதுக்கு தோ்வு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவா்கள் 2019 - 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த நாட்டு நலப் பணித் திட்ட தன்னாா்வலா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 5:42 pm

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவா்கள் 2019 - 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த நாட்டு நலப் பணித் திட்ட தன்னாா்வலா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

நேஷனல் பொறியியல் கல்லூரி தத்தெடுத்துள்ள நாலாட்டின்புதூா், முடுக்குமீண்டான்பட்டி, அய்யனேரி, படா்ந்தபுளி, வில்லிசேரி, தோணுகால் ஆகிய கிராமங்களில் கல்லூரியின் அமைப்பு பொறியியல் துறை இறுதியாண்டு மாணவா் பரத்ராஜ், மின்னணுவியல்- கருவியியல் துறை மாணவி லாவண்யா ஆகிய இருவரும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், தில்லியில் உள்ள ஷாக்ஷி எனும் அரசு சாரா தன்னாா்வலா் அமைப்பில் போக்சோ சட்டம் குறித்த பயிற்சியை நிறைவு செய்து அது தொடா்பாகவும் மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தியதற்காக இந்த விருதுக்கு இருவரும் தோ்வாகியுள்ளனா். அவா்களை, கல்லூரித் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.