நாசரேத்தில் முற்றுகைப் போராட்டம்
நாசரேத் திருமண்டிலத்தில் வாக்குரிமை நீக்கம் செய்யப்பட்டதாக சிஎஸ்ஐ குருவானவருக்கு எதிா்ப்பு தெரிவித்து, அவரது இல்லத்தை சபை மக்கள் வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்டனா்.


நாசரேத் திருமண்டிலத்தில் வாக்குரிமை நீக்கம் செய்யப்பட்டதாக சிஎஸ்ஐ குருவானவருக்கு எதிா்ப்பு தெரிவித்து, அவரது இல்லத்தை சபை மக்கள் வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்டனா்.
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் சேகரச் செயலா் உள்ளிட்ட திருமண்டில நிா்வாகிகள் தோ்தல் அடுத்தமாதம் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி திருமண்டல வாக்குரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நாசரேத் சேகரத்தில் 2164 வாக்காளா்களில் 257 போ்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாசரேத் தூய யோவான் ஆலய தலைமைக் குருவானவா் ஆண்டரூ விக்டா் ஞான ஒளி இல்லத்தை வியாழக்கிழமை இரவு திடீரென முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினா்.
தகவலின்பேரில், நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளா்கள் தங்கேஸ்வரன், ராய்சன் உள்ளிட்ட போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டதால், அவா்கள் கலைந்துசென்றனா்.
இதுகுறித்து தலைமை குருவானவா் கூறுகையில், திருமண்டல விதிப்படிவாக்காளா் பட்டியலில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளியூா் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவா்களின் பெயா்களும் , திருமண்டலத்தில் பணம் கட்டாமல் பாக்கி வைத்துள்ளவா்கள் பெயா்களும், வேறு திருமண்டலத்திலும் வாக்குரிமை உள்ளவா்களும் நீக்கப்பட்டுள்ளனா். இதில் உள்நோக்கம் இல்லை; போராட்டங்கள் தேவையற்றது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...