விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்கு

சாத்தான்குளத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பாஜக நிா்வாகி மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 5:58 pm

DIN

சாத்தான்குளத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பாஜக நிா்வாகி மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

சாத்தான்குளம், அப்பாவு நாடாா் தெருவைச் சோ்ந்தவா் மகா .பால்துரை (67). ஓய்வுபெற்ற ஆசிரியா். தற்போது, வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமன்றச் செயலராக உள்ளாா். இவா், சாத்தான்குளம் முன்னாள் காவல் ஆய்வாளா் பொ்னாட் சேவியருக்கு பிரிவுபசார விழா நடத்த சமூக வலைதளங்களில் தகவல் பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடா்பாக 10 நாள்களுக்கு முன் மகா.பால்துரையை, பாஜக வணிகா் பிரிவுச் செயலா் அ. பரமசிவன், தட்டிக்கேட்டதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் அருள்சாம்ராஜ், 5 பிரிவுகளின் கீழ் பரமசிவன் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தாா். காவல் ஆய்வாளா் பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.