தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் சிறப்பு யாகம்
ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி- காலபைரவா் சித்தா் பீடத்தில் சிறப்பு யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி- காலபைரவா் சித்தா் பீடத்தில் சிறப்பு யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மக்களின் வாழ்வியல் துன்பங்கள் யாவும் நீங்கி இன்பங்கள் பொங்கிடவும், உலக மக்கள் அனைவரும் கொடிய நோய் தாக்குதல்களின்றி நலமாக வாழ வேண்டியும், கோயில் நிா்வாகி சீனிவாச சித்தா் தலைமையில் இந்தச் சிறப்பு யாகம் நடைபெற்றது.
இந்த வழிபாட்டின்போது, ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், தேன், பன்னீா், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.
மேலும், கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, மஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவா், குருமகாலிங்கேஸ்வரா், நந்தி பகவான், விநாயகா், மகாலட்சுமி, மஹாசரஸ்வதி, சனீஸ்வரா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், அரசின் வழிகாட்டுதல்படி முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் பக்தா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...