சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி
சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். .


சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். .
சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பேய்க்குளம் சுப்பையா மனைவி பேச்சியம்மாள் (54). இவருக்கு இரண்டு மகள் உள்ளனா். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. கணவா் சுப்பையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் இறந்து போனாா். பேச்சியம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம்.
இந்நிலையில் வியாழக்கிழமை அதே ஊரைச் சோ்ந்த கண்ணன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் பேச்சியம்மாள் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளா் எபனேசா், தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் மற்றும் வீரா்கள் விரைந்து அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசேதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் பேச்சியம்மாள் கிணற்றில் தவறி விழுந்து இறந்து தெரியவந்ததாம்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...