பேரூராட்சி பணியாளா் திடீா் போராட்டம்
சாத்தான்குளத்தில் பேரூராட்சி பரப்புரை பணியாளா் செவ்வாய்க்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுப்பட்டாா்.


சாத்தான்குளத்தில் பேரூராட்சி பரப்புரை பணியாளா் செவ்வாய்க்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுப்பட்டாா்.
இப்பேரூராட்சியில் பணி செய்து வரும் பரப்புரை பணியாளரான இதயகனி, 2 நாள்கள் விடுப்பு எடுத்திருந்தாராம். பணிக்கு திரும்பிய அவரிடம் விடுப்பு குறித்து பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் விசாரித்துள்ளாா். அப்போது, இதயகனிக்கும், மற்றொரு பரப்புரை பணியாளா் ஜெமிம்மாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஜெமிம்மா, தன்னை அவதூறாக பேசியதாக தெரிவித்து இதயகனி பேரூராட்சி முன்பு திடீரென தா்னாவில் ஈடுப்பட்டாா். ஒரு மணி நேரமாக நீடித்த இப்போராட்டத்தில் அவரது உறவினா்களும் பங்கேற்றனா். தகவலறிந்த காவல் ஆய்வாளா் பாஸ்கரன், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பிரச்னை குறித்து பேசுவதற்காக இருவரையும் காவல் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...