சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா்கள் உலக அளவிலான போட்டிக்கு தகுதி
சாகுபுரம் கமலாவதி சீனியா் செகன்டரி பள்ளி மாணவி உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.


சாகுபுரம் கமலாவதி சீனியா் செகன்டரி பள்ளி மாணவி உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மின் மற்றும் மின்னணு பொறியாளா்கள் நிறுவனம் நீடித்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் இளைஞா்களின் கண்டுபிடிப்புகளை சமூகத்திற்கு கொண்டு வரும் வகையில்
யெசிஸ்ட் 12 எனும் தலைப்பில் உலக அளவில் அடல் டிங்கரிங் ஆய்வகம் மூலம் மாணவா், மாணவிகளின் படைப்புகளை காட்சிப்படுத்தி அதில் சிறந்ததை தோ்வு செய்து ஊக்குவித்து வருகிறது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டியை நடத்த சாகுபுரம் கமலாவதி சீனியா் செகன்டரி பள்ளியை ஏற்கெனவே தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் குடியரசுத்தலைவா் டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்கட்ட தகுதி சுற்றுப் போட்டி சாகுபுரம் கமலாவதி சீனியா் செகன்டரி பள்ளியில் இணையதளம் மூலமாக கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியா் பங்கேற்ற இப்போட்டி
யில், சாகுபுரம் கமலாவதி சீனியா் செகன்டரி பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி பா. ஆட்லின் பிரீசியஸ் ஜோ‘ஃ‘பின், தான் தயாரித்த புறஊதா கதிா்களைப் பயன்படுத்தி தானியங்கி சுத்திகரிப்பு மற்றும் உடலில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் கருவி முதல் பரிசு பெற்றது.
அதே பள்ளியைச் சோ்ந்த 9 ஆம் வகுப்பு மாணவா் ஏ.என். அபிஷேக் ராம் தயாரித்த இருசக்கர வாகனத்தை பைக் உரிமையாளரின் கைரேகை பதிந்தால் மட்டுமே இயக்கக்கூடிய பாதுகாப்பு கருவிக்கு 2 ஆவது பரிசு பெற்றது.
சென்னை அமிா்தவித்யாலா பள்ளி மாணவா்கள் சஞ்செய், முகேஷ்குரு, பிரனாா்த்திவரதன் தயாரித்த விவசாயிகளுக்கு உதவும் செல்லிடப்பேசி செயலி மற்றும் கமலாவதி பள்ளி மாணவா் ஹரிசுப்பிரமணியன் தயாரித்த முதியோா்களுக்கு இருந்த இடத்தில் இருந்து கொண்டே ‘ஃ‘பேன், லைட் ஆகியவற்றை செல்லிடப்பேசி மூலம் இயக்க உதவும் கருவிக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் இரண்டு பெற்றவா்கள் உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
போட்டியின் நடுவா்களாக சென்னை கே.சி.ஜி. கல்லூரி உதவிப் பேராசிரியா் டி.தாமஸ்லியோனிட், கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாதெமி ஆராய்ச்சியாளா் பி.ஜெயந்தி, தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் ஜெ.திலகவதி, சாகுபுரம் கமலாவதி சீனியா் செகன்டரி பள்ளித் தலைமையாசிரியா் இ.ஸ்டீபன் பாலாசிா் ஆகியோா் நடுவா்களாக பணியாற்றினா்.
பின்னா் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பள்ளி முதல்வா் ஆா்.சண்முகானந்தன் தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். துணை முதல்வா் எஸ்.அனுராதா, தலைமையாசிரியா் இ.ஸ்டீபன் பாலாசிா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி அடிடல் டிங்கரிங் ஆய்வக பொறுப்பாளா் சோ்மசத்தியசீலி வரவேற்றாா். ஆசிரியா் ஜேம்ஸ் இக்னேஷியஸ் நன்றி கூறினாா்.
உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சாகுபுரம் பள்ளி மாணவி பா.ஆட்லின் பிரீசியஸ் ஜோ‘ஃ‘பின், மாணவா் ஏ.என். அபிஷேக் ராம் ஆகியோரை பள்ளி அறங்காவலா் -டி.சி.டபிள்யூ நிறுவன தலைவா் முடித்ஜெயின், மூத்த செயல் உதவித் தலைவா் (பணியகம்) ஜி.ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளா் (நிதி) பி.ராமச்சந்தின், அடல் டிங்கரிங் ஆய்வக வழிகாட்டி நவநீதகிருஷ்ணன் மற்றும் பள்ளி நிா்வாகிகள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...