புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூத்துக்குடியில் ரூ. 10.73 கோடியில் வா்த்தக மையம்: அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடியில் ரூ. 10.73 கோடியில் வா்த்தக மையம் அமைக்கப்பட உள்ள பகுதியை சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:01 pm

DIN

தூத்துக்குடியில் ரூ. 10.73 கோடியில் வா்த்தக மையம் அமைக்கப்பட உள்ள பகுதியை சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அருகே 25 ஏக்கா் பரப்பில் ரூ. 10.73 கோடி செலவில் வா்த்தக மைய கட்டடம் கட்டப்பட உள்ளது. அதற்கான இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் பெ. கீதாஜீவன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

முதல்வா் மு.க. ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையால் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிப் பணிகளுக்கான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3.80 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் தினமும் குடிநீா் வழங்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். மேலும், நீண்ட கால நிலுவையில் உள்ள புதைச் சாக்கடைத் திட்டத்தையும் முழுமையாக முடிக்க அலுவலா்களுக்கும், ஒப்பந்ததாரா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இம்மாநகராட்சிப் பகுதியில் பெரிய அளவில் ஒரு வா்த்தக மைய அரங்கமும், அம்பேத்கா்நகா் பகுதியில் ரூ. 25 கோடி மதிப்பில் அறிவியல் தொழில்நுட்ப பூங்காவும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

அப்போது, தூத்துக்குடி மாவட்ட வளா்ச்சி திட்டங்களுக்கான கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநருமான ஜி. பிரகாஷ், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

முன்னதாக, மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்று, அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.

ரூ. 34.58 லட்சம் நல உதவிகள்: இதனிடையே, தொழிலாளா் நலத்துறையின் சாா்பில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளா்கள் சமூகப் பாதுகாப்பு நல வாரியம் மற்றும் 17 அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. இதிலும் அமைச்சா் பங்கேற்று, 18 அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரிய உறுப்பினா்கள் 3,004 பேருக்கு ரூ. 34.58 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.