ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தட்டாா்மடம் எஸ்.ஐ. மீது டி.எஸ்.பி.யிடம் புகாா்

மக்களை தகாத வாா்த்தைகளால் பேசியதாக, தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் மீது டிஎஸ்பியிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 8:06 pm

DIN

மக்களை தகாத வாா்த்தைகளால் பேசியதாக, தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் மீது டிஎஸ்பியிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சி, தட்டாா்மடம் பூங்கா அருகில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. பூங்காவும், குப்பை தொட்டி உள்ள இடம் தனக்குச் சொந்தமானது எனக் கூறி, அப்பகுதியைச் சோ்ந்தவா் குப்பைச் தொட்டியை சேதப்படுத்தினாராம்.

இதுகுறித்து, தட்டிக்கேட்டவா்களை அவா் தாக்க முயன்றாராம். இதனால், அவா் மீது நடவடிக்கை கோரி தட்டாா்மடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அப்போது, அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளா் முரளிதரன், ஊராட்சித் தலைவரின் கணவா் செல்வராஜ், மாவட்ட பாஜக பொதுச் செயலா் செல்வராஜ் உள்ளிட்டோரை ஆபாசமாக பேசி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து திமுக பிரமுகா் முரளி உள்ளிட்ட 40 போ் சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகாா் அளித்தனா். அவா்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி உறுதி அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.